உடல் நலம் : மங்கள வாழ்வு தரும் மகாளய பட்சம்....!

Saturday, September 21, 2019

மங்கள வாழ்வு தரும் மகாளய பட்சம்....!

#மகாளய பட்சம்....!



மங்கள வாழ்வு தரும் மகாளய பட்சம்....!
மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை #அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர்.

இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை #மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது மிகவும் விஷேசமானதாகும்.

#மகாளய பட்சம் எப்போதும், பௌர்ணமி முடிந்த மறுநாள் ஆரம்பமாகி (அதாவது இன்று) அதற்கு அடுத்து வரும் அமாவாசை வரையிலான இரு வார காலம் இருக்கும்.

அந்த வகையில் பௌர்ணமி முடிந்த நிலையில் (15.09.2019) மகாளய பட்சம் ஆரம்பமாகிறது.

மகாளய பட்சத்தின் #சிறப்பு :

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு #தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று #எள், #தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது.

மாதந்தோறும் முன்னோர்களுக்கு #தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களைச் செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன் கிடைக்கும்.

#வேத நூல்கள் சொல்லும் கதை :

பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே #பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். #சைவம் மட்டுமே உண்ண வேண்டும்.

வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது.

#சிரார்த்தம், திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பதாகும்.

இந்த பதினான்கு நாட்களும் #முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும்.

#முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு புல், பழம் கொடுக்கலாம்.

#எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து, 'காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும், தண்ணீரும் விட்டுக்கூட திதி பூஜையை செய்யலாம்.
#எள்ளும், #தண்ணீரும் #திதி #பூஜை #மகாளய_பட்சம் #அமாவாசை

No comments:

Post a Comment