உடல் நலம் : சப்ஜா விதையின் பயன்கள்.

Thursday, September 26, 2019

சப்ஜா விதையின் பயன்கள்.

சப்ஜா விதையின் பயன்கள்...!



திருநீற்றுப்பச்சிலை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை.

இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை  பித்தத்தை குறைக்கும்.  உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.

ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

மருத்துவ_குணம் #சப்ஜா_விதை #பயன்கள்

No comments:

Post a Comment