உடல் நலம் : மனிதனை கொல்வது நோயா? பயமா?* என்று இன்று வந்த வாட்சப் பதிவு. பகிர்கிறேன்.

Wednesday, September 18, 2019

மனிதனை கொல்வது நோயா? பயமா?* என்று இன்று வந்த வாட்சப் பதிவு. பகிர்கிறேன்.





*1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?*

*2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?*

*3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?*

*4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?*

*5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?*

*6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?*

*7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?*

*ஏன்? ஏன்? ஏன்?*

*காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.*

*நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.*

*எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.*

*ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்டும்.*

*எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.*

*உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.*

*என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில்   குணமுமாகிவிடுகிறது.*

*நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.*

*வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்*

*காற்றை கண்டு பயப்படாதீர்கள்*

*குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்*

*சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்*

*சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்*

*இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்*

*இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்.*

No comments:

Post a Comment