உடல் நலம் : கோவைக்காய் மருத்துவ பயன்கள்

Tuesday, September 24, 2019

கோவைக்காய் மருத்துவ பயன்கள்

கோவைக்காயின் நன்மைகள்



கொழுப்பு உணவினை உண்பதால் ஏற்படும் தலைவலி, நமது உடலில் தானாகவே அனிச்சை செயல் நடைபெறும். தானாகவே காலை ஆட்டுதல், தூங்கும் போது அவர்களுக்கு தெரியாமலே கை கால் தூக்கி போடுதல் போன்ற உடல் அசைவுகள் ஏற்படும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் தன்னை தானே தளர்த்திக் கொண்டு வெளிவர இந்த அனிச்சை செயலை பயன்படுத்தி வெளியேற்ற முயற்சிக்கின்றது. கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சியில்லாத காரணத்தினால் அந்த கொழுப்பை கரைக்க, ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொழுப்பை மாற்ற உடலே தன்னைத் தானே அசைத்துக் கொள்ளும் அனிச்சை செயல் தான் இரவில் கை, கால் அசைத்தலாகும்.

தோலே உறுப்பாக உள்ள ஒரு உறுப்பு கண். கண் என்பது ஒரு தோல் தான். இந்த தோல் வழியாகத் தான் ஒலி ஊடுரவி உள்ளே செல்கிறது. எனவே கொழுப்பு சாப்பிடாமல் இருந்தால் கண் தெரியாமற் போக வாய்ப்புண்டு. கண்ணின் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு அவசியம் தேவை. மாலைக்கண் நோய்க்கு அடிப்படை காரணம் தோல் வியாதி தான்.

உடல் தனக்கு தேவையில்லாத கொழுப்பை ஏதேனும் ஓரிடத்தில் ஒதுக்கி வைத்து மூடி விடுகிறது. இது தான் பின்னர் கொழுப்பு கட்டியாக மாறுகின்றது. இந்த கெட்ட கொழுப்பு காதில் தேவையில்லாத அழுக்கு போன்று வெளியேறும். காதில் தேவையில்லாத விஷயங்கள் வந்தால் உடம்பால் ஏதோ கரைக்க முடியாத ஒரு பொருள் கஷ்டத்தினை கொடுக்கின்றது என்று பொருள். கண் மூக்கு வாயில் எந்த பிரச்சினை வந்தாலும் அது சிறிய விஷயம். ஆனால் காதில் ஒரு விஷயம் வரக் கூடாது. காதில் அழுக்கு, சீழ், அரிப்பு, சப்தம் வந்தால் அது ஒரு தலையாய பிரச்சினையாக நினைத்து அதை சரி செய்ய வேண்டும். “காதில் ஒரு பாதிப்பு என்றால் உடல் முழுமையும் பாதிப்பு ஏற்படும்”.

மூக்கில் கெட்ட கொழுப்பு சேர்வதன் காரணமாக மூக்கில் சதை வளர்ந்து மூக்கடைப்பு ஏற்படும்.

உணவுக்குழாய் மூச்சு குழாயில் உள்ள கெட்ட கொழுப்பினால் திசுக்கள் தடிமன் ஆகி பாதை அடைபட்டு மூச்சடைப்பு, தொண்டை அடைப்பு ஏற்படும். சளி வெளியேற முடியாமல் கர் கர் என்று சப்தம் ஏற்படும்.

தேவையற்ற கழிவுகள் எண்ணெய் பசைகள் குடலில் தங்கும் போது மேல் சுவாசம் பாதிப்பாகும். கீழ் சுவாசத்திற்கும், மேல் சுவாசத்திற்கும் தொடர்புண்டு. கீழ் சுவாசத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மேற் சுவாசம் குறையும். மூச்சு திணறல் ஏற்படும்.

நாம் சாப்பிடும் உணவு தோல் வழியாக உள் வாங்காததினால் சாப்பிட்ட பிறகு மந்தமாக, வயிறு கல் போன்று காணப்படும்.

குடலில் எண்ணெய் பசை தேக்கத்தினால் மலம் போகும் போது துர்நாற்றத்துடன் கருப்பாக வெளியேறும்.

சிறுநீரில் கெட்ட கொழுப்புகள் ஜீரணம் ஆகாமல் நுரையுடன் வெளிவரும்.

தோல் நோய்களான வெண்திட்டுகள், சொரியாசிஸ், தேமல் போன்றவை உருவாகலாம்.

தோல் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கோவைக்காய். விட்டமின் A நிறைந்தது. இது நோய் தொற்று தடுப்பு மருந்தாக செயற்படும்.

கொழுப்பு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கோவைக்காய். கோவைக்கு இணையான குணம் கொண்டது வெற்றிலை. உடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் வெளியேற்றும் ஆற்றல் உண்டு.


No comments:

Post a Comment