உடல் நலம் : மூக்கிரட்டை கீரை பலன்கள்.

Tuesday, September 17, 2019

மூக்கிரட்டை கீரை பலன்கள்.


சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.

மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காயவைத்து, அரைத்து பொடியாக்கி அதை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கும்.

மூக்கிரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ஈரல் நன்கு பலம் பெறும். ஈரலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட குறைபாடுகளையும் போக்கும். பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கும். உடலை பல்வேறு விதமான நோய்கள் தாக்குவதிலிருந்தது நம்மை பாதுகாக்கும்.

மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காயவைத்து, பொடி செய்து நீரில் வேகவைத்து ஆற்றி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.

மூக்கிரட்டைக் கீரையைக் கொண்டு அதைச் சுத்தம் செய்து, அம்மியில் வைத்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும்

No comments:

Post a Comment