உடல் நலம் : June 2019

Saturday, June 22, 2019

எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளும் அதற்கான மருத்துவமும்.

             முன்பு வயது முதிந்தவர்களுக்கு மட்டும் எலும்பு மூட்டுகளிலும் வலி ஏற்படும்.  இப்போது இந்த நோய் அனைத்து வயதினரையும் குறிப்பாக பெண்களை அதிக அளவில் தாக்குகிறது. எலும்பு மூட்டுகளில் வலி ஏற்படுவதற்கான காரணம், மூட்டு பகுதியில் உள்ள இணைப்பு திசு (CARTILAGE)சில விபத்தினால் கிழிவதாலும் அல்லது நசுங்குவதாலும் அல்லது தேய்ந்து போவதாலும் இணைப்புப்பகுதியின் உள்ள எலும்புகளில் உராய்வு ஏற்பட்டு தேய்மானம் அடைகிறது, இதனால் அந்த இணைப்பு மூட்டுகளில் வலி, வீக்கம் (ARTHRITIES) ஏற்படுகிறது.




Wednesday, June 19, 2019

கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களும் அதனை தடுக்கும் முறைகளும்.

                 கோடை காலத்தில் சரும நோய்களும் , தொற்று நோய்களும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உணவு  சீக்கிரம்  கெட்டு விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் அப்போது சமைத்த உணவை உட்கொள்ளுங்கள். கோடைகாலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியான உணவை எடுத்து கொள்ள வேண்டும். வாயு நிரப்பப்பட்ட  மென்பானங்கள் குடிக்க கூடாது.கரும்புச்சாறு, இளநீர், மோர், பழச்சாறு குடிக்கலாம்.

 அம்மை நோய்:       
                                கோடை காலத்தில் அம்மை நோய்க்கான வைரஸ் அதிகமாக பரவும் தன்மை கொண்டது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கலாம். பகல் நேரங்களை வெயிலில் அலைவதை குறைத்து கொள்ளலாம். அம்மை நோயால் பாதிக்க பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தும்மல் இருமல் மற்றும் சில காரணங்களால் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. அம்மை நோய் பாதிக்கப்பட்டால் பயப்பட தேவையில்லை அவர்களுக்கு குளிர்ச்சியான உணவு , பழங்கள் , இளநீர் , வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு இதனை கொடுக்கலாம். அவர்களுக்கு சிறந்த கவனிப்பு ஓயுவும் அவசியம். இதற்கு வேப்பிலை , மஞ்சள் அரைத்து பூசி குளிக்க வைத்தால் இந்த வைரஸ் மேலும் பரவாமலும் அந்த நோயின் தாக்கத்தையும் குறைக்கும். 


பெண்கள் கருவுற்றுருக்கும்போது முதல் மூன்று மாதங்கள் சந்திக்கும் பிரச்சினை தீர்வு காண்பது எவ்வாறு?