நம் அனைவருக்கும் #சோர்வு என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால், இந்த சோர்வு நமது அன்றாட வாழ்வின் மிகப்பெரும் பிரச்சனையாக திகழ்கிறது.
ஏனெனில், சோர்வு அதிகமாக இருப்பதால் நமது குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஆனந்தமாக நேரத்தை செலவிடாமல் செய்வதோடு, #வேலை செய்யும் இடங்களில் எளிய வேலையை கூட விரைவில் செய்ய முடியாத அளவு செய்கிறது.
சோர்வின் பின்னால் முக்கிய காரணமாக விளங்குவது கடினமான #வேலை, #பயணம், நிலையான #வாழ்க்கை முறை, #வயது போன்றவற்றுடன் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளாக திகழும் #நீரிழிவு, இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவையும் காரணமாகும்.
சோர்வில் இருந்து விடுபட #செய்யவேண்டியவை:
பொதுவாக நாம் அனைவரும் சோர்வில் இருந்து விடுபட பின்வரும் 5 செயல்களை அன்றாட வாழ்வில் கடைபிடத்தாலே போதும்.
#உடற்பயிற்சி
அன்றாடம் காலை எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்படலாம். எனவே #ரன்னிங், #வாக்கிங், #யோகா, #சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து வருவது சோர்வில் இருந்து விடுபட உதவும்.
#தண்ணீர் குடிப்பது
ஒரு வாகனம் சரிவர செயல்பட பெட்ரோல் எப்படி முக்கியமோ, அதைப்போல நம் உடலும் சரிவர செயல்படுவதற்கு தண்ணீர் மிக அவசியம்.
நமது உடலில் தண்ணீர் சரியான அளவில் இல்லாவிட்டால், #உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். ஆகையால், அவ்வப்போது தண்ணீர் குடித்து வருவது சோர்வை நீக்க உதவும்.
#குறைந்த உடல் எடை:
உடல் எடை தேவையான அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைக்க சரியான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
#காலை உணவு:
இன்றைய நவீன #வாழ்க்கை முறையில் பலரும் காலை உணவை தவிர்த்தோ அல்லது தேவையான அளவு உண்பதில்லை. இதனால், அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்பின்றி மந்தமாக செயல்பட வழிவகுக்கும்.
மேலும், நேரம் கிடைக்கும் சிறு இடைவெளியில் ஆரோக்கியமான உணவுப்பொருளை சாப்பிட்டவாறு இருக்க வேண்டும்.
இப்படி சாப்பிட்டு வருவதால், உடலிலுள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
#தூக்கம்
ஒவ்வொரு மனிதனும் சுறுசுறுப்பாக செயல்பட முக்கியமாக தேவைப்படுவது நல்ல தூக்கம்.
#தூக்கமின்மை ஒருவருக்கு சோர்வை உண்டாக்குவதோடு மட்டுமின்றி அவரது ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
No comments:
Post a Comment