உடல் நலம் : மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு 5 முக்கிய குறிப்புகள்

Thursday, August 1, 2019

மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு 5 முக்கிய குறிப்புகள்


தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது பொதுவான ஒன்றாகும்.ஏனெனில் தற்போது விற்கப்படும் செயற்கைப் பொருட்களே முக்கிய காரணமாகும்‌.

இருப்பினும் மாரடைப்பை வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இன்று பார்ப்போம்.

1.மாரடைப்புக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று புகை பிடிப்பதாகும்.நீங்கள் புகைப்பிடிப்பவராயின் முடிந்த அளவு புகை பிடிப்பதை குறைக்க வேண்டும்.மேலும் மது அருந்துதலை பெரும்பாலும் குறைத்துக் கொள்ளுதல் மிகவும் நன்று.

2.துரித உணவை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்தும்.அதனால் முடிந்த அளவு இயற்கை உணவு பொருட்களான காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நன்று.மேலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக முடிந்த அளவு இருங்கள்.

3.உங்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

4.மன அழுத்தம் அதிகம் வரும் போது அவற்றை முயற்சிகள் செய்து அமைதிப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

5.மேலும் உணவை அதிகம் உண்பதை தவிர்த்து சரியான உணவுப் பொருட்களான அதிகம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment