உடல் நலம் : கம்ப்யூட்டரும்... கண்களும்...

Thursday, August 1, 2019

கம்ப்யூட்டரும்... கண்களும்...




கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்

கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்க வேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும்.

மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏர் கண்டிஷனர் ஏசி காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரக்கூடாது.

நாம் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்கள் உலர்ந்து போவதை தவிர்க்க முடியும். இருக்கைகள் பின்னால் சார்ந்து அமர வசதியாக இருக்க வேண்டும். பாதங்கள் தரையில் படும் படியாக இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட் ரோமை நிச்சயம் தவிர்க்கலாம். கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment