உடல் நலம் : தொண்டை, வலி நீங்க...!*

Friday, August 16, 2019

தொண்டை, வலி நீங்க...!*



கற்பூரவல்லியை சாறெடுத்து கற்கண்டு சேர்த்துப் பருகினால் தொண்டை வலி நீங்கும்.

*தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறைய...!*

மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.

*தொண்டைப்புண் குறைய..‌!*

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்கள் குறையும்.

 *தொண்டைப்புண் குறைய...!*

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி பாதி எலுமிச்சை பழத்தில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூளை தூவி நன்றாக எலுமிச்சை பழத்தில் கலக்கும் படி கரண்டி வைத்து அழுத்தி விட்டு சிறிது சூடேற்றி விட்டு பிறகு அதன் சாறை பிழிந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் குறையும்.

 *தொண்டைப்புண் குறைய...!*

2 ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

*தொண்டைக்கட்டு குறைய...!*

தொண்டைக்கட்டு குறைய அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் பொடித்து வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து தூள் செய்து துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.

 *தொண்டைகட்டு குறைய...!*

தொண்டைகட்டு குறைய வில்வ இலையை பொடி செய்து அதில் அரை கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைகட்டு குறையும்.

*தொண்டைக்கட்டு குறைய..!*

தொண்டைக்கட்டு குறைய மணத்தக்காளிக் கீரை இலைகளை போட்டு குடிநீர் காய்ச்சி பருகி வந்தால் தொண்டைக்கட்டு குறையும்

*தொண்டைக்கட்டு குறைய...!*

தொண்டைக்கட்டு குறைய தேங்காய் பாலில் மாசிக்காயை நன்றாக உடைத்துப் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குறையும்.

No comments:

Post a Comment